News September 26, 2025
40,000 ஆண்டுகளா? என்ன ஒரு ஆச்சரியம்!

சைபீரியாவில் 40,000 ஆண்டுகள் பழமையான ஓநாய் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இது, பலரது கவனத்தையும் ஈர்த்த சமீபத்திய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக உள்ளது. ஓநாயின் பற்கள் மற்றும் உறுப்புகள் முழுமையாக உள்ளது. மேலும், அதன் DNA சிதையாமல் அப்படியே உள்ளதால், அழிந்துபோன இனங்கள் குறித்து பல்வேறு தகவல்களை பெற முடியும். 40,000 ஆண்டுகள் எப்படி அப்படியே பாதுகாப்பாக உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது.
Similar News
News September 26, 2025
ஆசிய கோப்பை: இந்தியா பேட்டிங்

ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றின் இன்றைய கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள ஃபைனலுக்கு இது ஒரு பயிற்சி ஆட்டமாகவே இந்திய அணிக்கு இருக்க போகிறது. இந்த தொடரில் இதுவரை இரு அணிகளும் 5 முறை பலப்பரீட்சை நடத்தியுள்ளன. அந்த 5 போட்டிகளிலும் வென்று இந்திய அணி வலுவாக உள்ளது.
News September 26, 2025
பெண்களுக்கு ₹10,000 நிதி.. PM மோடி துவக்கி வைத்தார்

பீஹாரில் சுய தொழில் செய்வதற்காக 75 லட்சம் பெண்களுக்கு ₹10,000 வழங்கும் திட்டத்தை PM மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ₹7,500 கோடி, பெண்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு முதல் தவணையாக ₹10,000, 2-வது தவணையாக ₹2 லட்சம் வழங்கப்படவுள்ளது. பிஹாரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் தமிழகத்திற்கும் வருமா? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
News September 26, 2025
இங்கே செல்போன்கள் வேலை செய்யாதாம்

பூமியின் சில இடங்களில் செல்போன்கள் செயல்படுவதில்லை. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தால் இந்த இடங்கள் இயற்பியல், காந்தவியல் பற்றிய நமது புரிதலுக்கு சவாலாக உள்ளன. அவை என்னென்ன இடங்கள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதுபோன்று உங்களுக்கு தெரிந்த விசித்திரமான இடத்தின் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.