News July 10, 2025
தமிழகத்தில் 4,000 காலிப்பணியிடங்கள்

அந்தந்த மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் 2,500 செவிலியர்கள், 1,500 மருந்தாளுநர்கள் & லேப் டெக்னீசியன்களை நியமிக்க தேசிய நலவாழ்வு குழுமம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இதனை MRB நிரப்பி வந்த நிலையில், இம்முறை மாற்றப்பட்டுள்ளது. இப்பணியானது தற்காலிகமானது. மேலும், 11 மாத கால ஒப்பந்தத்தில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் மாவட்டந்தோறும் வெளியாகும்.
Similar News
News July 10, 2025
ஆஷா போன்ஸ்லே காலமானாரா? மகன் மறுப்பு

பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே காலமாகி விட்டதாக சமூகவலைதளங்களில் செய்தி வைரலாகி வருகிறது. இது அவரின் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியதோடு, பலரும் சமுகவலைதளங்களில் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். எனினும், இந்தத் தகவலை ஆஷா போன்ஸ்லேயின் மகன் ஆனந்த் போன்ஸ்லே மறுத்துள்ளார். ஆஷா போன்ஸ்லே காலமாகி விட்டதாக பரவும் தகவலில் உண்மையில்லை, அவர் நலமாக உள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
News July 10, 2025
12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

12 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஈரோடு, தென்காசி, கோவை மாவட்ட மலை பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கடலூரில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
News July 10, 2025
தங்கம் விலை ஒரு வாரத்தில் ₹680 சரிவு

ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் ஆபரணத் <<17014491>>தங்கத்தின் விலை<<>> இன்று சற்று அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த ஒரு வாரத்தில் சவரனுக்கு ₹680 குறைந்திருக்கிறது. அதாவது, கடந்த வியாழனில் (ஜூலை 3) 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹72,840 ஆக இருந்தது. அதேநேரத்தில், இன்றைய நிலவரப்படி, 1 சவரன் ₹72,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்திருக்கிறது.