News March 17, 2024
வளர்ந்த இந்தியாவுக்கு 400 இடங்கள்

இந்தியா வளர்ச்சியடைய 400 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கு 400 இடங்கள், வளர்ந்த ஆந்திராவுக்கு 400 இடங்கள் என மொத்த நாடும் கூறுவதாக தெரிவித்தார். ஆந்திராவில் பாஜக கூட்டணியில் TDP, பவண் கல்யாண் கட்சிகள் உள்ளன.
Similar News
News November 22, 2025
இப்படி Resume ரெடி பண்ணா வேலை கிடைப்பது Easy!

Chatgpt-ஐ வைத்து Resume-ஐ உருவாக்கினால் பல கம்பெனிகளில் உங்களால் ஷார்ட்லிஸ்ட் ஆக முடியும். ➤முதலில் Chatgpt-க்கு சென்று ‘You are my Resume Creator’ என டைப் செய்யுங்கள் ➤Job Description-ஐ Chatgpt-ல் அனுப்புங்க ➤உங்கள் வேலைக்கு ஏற்ற Resume Format-ஐ chatgpt வழங்கிவிடும் ➤பிறகு அந்த தகவல்களை Insta Resume.io வெப்சைட்டில் உங்களுக்கான டெம்ப்லேட்டை தேர்வு செய்து Resume-ஐ எளிதாக உருவாக்கலாம். SHARE.
News November 22, 2025
127 கிலோ தங்கத்தை கடத்திய தமிழ் பட நடிகை!

தமிழில் விக்ரம் பிரபுவின் ‘வாகா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரன்யா ராவ். இவர், கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் DRI, ரன்யா ராவ் உள்பட 4 பேர் மீது 2,200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதில், அவர் மொத்தமாக 127 கிலோ தங்கத்தை கடத்திய அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
News November 22, 2025
வெள்ளி விலை ₹3,000 உயர்ந்தது

கடந்த 2 நாள்களாக குறைந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.22) கிலோவுக்கு ₹3,000 அதிகரித்துள்ளது. கிராம் ₹172-க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,72,000-க்கும் விற்பனையாகிறது. இந்த வாரத்தின் தொடக்க வர்த்தகத்தில்(நவ.17) கிலோ ₹1,73,000-க்கு விற்பனையான வெள்ளி வார இறுதி நாளான இன்று ₹1,000 குறைந்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. நாளை விடுமுறை என்பதால் இதே விலை நீடிக்கும்.


