News April 17, 2025
மத்திய அரசில் 400 பணியிடங்கள்: ₹56,100 சம்பளம்

மத்திய அரசின் Nuclear Power Corporation of India Limited-ல் இருக்கும் 400 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளன. சிவில், மெக்கானிக்கல் Engg. படித்து, 26 – 31 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்முக தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். மாதச் சம்பளம் ₹56,100 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30. முழு தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Similar News
News November 28, 2025
மோடியின் S5 கொள்கைகள் தேவை: ராணுவ தளபதி

உலக ஒழுங்கு நிச்சயமற்ற & சிதைந்த நிலையிலேயே சென்று கொண்டிருப்பதாக ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார். சாணக்யா பாதுகாப்பு உரையாடல் 2025 நிகழ்வில் பேசிய அவர், சர்வதேச அளவில் பெரும் சக்திகளின் போட்டி உலகை பல துருவங்களாக பிரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மரியாதை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி, வளம் என்ற PM மோடியின் S5 கொள்கைகளின் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
News November 28, 2025
நவம்பர் 28: வரலாற்றில் இன்று

*1890 – ஜோதிராவ் புலே நினைவுநாள்.
*1893 – நியூசிலாந்தில் முதல்முறையாக பெண்கள் வாக்களித்தனர்.
*1927 – மூத்த அரசியல்வாதி HV ஹண்டே பிறந்தநாள்.
*1964 – நாசா செவ்வாய் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
*1972 – பாரிஸ் நகரில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
News November 28, 2025
தவெகவில் செங்கோட்டையன்: ரஜினி ரியாக்ஷன்

தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்த கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார். அதேநேரம், உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினார். ஏற்கெனவே, அரசியல் குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என்று ரஜினி கூறி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘ஜெயிலர் 2’ ஷூட்டிங் நன்றாக போய்க் கொண்டிருப்பதாகவும், ரசிகர்களின் ஆசியுடன் தான் சூப்பர் ஸ்டாராகவே உள்ளேன் என்றும் கூறினார்.


