News April 8, 2024
இப்போது 400, ஜூனில் அது 200 ஆக குறையும்

பாஜக 400 இடங்களில் வெற்றிபெறும் என பிரதமர் மோடி கூறியதை கிண்டல் செய்யும் விதமாக முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி X தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், இப்போது 400 என்கிறார்கள், மே மாதம் அது 250 ஆக குறையும். ஜூனில் 175 – 200 ஆக இருக்கும். நான் அல்போன்சா மாம்பழத்தின் விலையைக் கூறுகிறேன். எல்லாவற்றையும் அரசியலாக பார்க்காதீர்கள் என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News July 7, 2025
திமுக ஐடி விங்கில் இணையும் டாக்டர் அழகுராஜா!

திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளராக டாக்டர் அழகுராஜாவை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக புதிய வியூகங்களுடன் திமுக களமிறங்குகிறது. குறிப்பாக சோசியல் மீடியாக்களில் அரசின் திட்டங்கள், அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வதந்திகளை மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என ஐடி விங்கிற்கு தலைமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
News July 7, 2025
தொடர் உயிரிழப்புகள்.. காந்தாரா 1 போஸ்டர் ரிலீஸ்

ரிஷப் ஷெட்டியின் பிறந்தநாளை ஒட்டி, ‘காந்தாரா சாப்டர் 1’ பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது. தீப்பிழம்புகளுக்கு நடுவே ரிஷப் ஆவேசமாக இருக்கும்படியாக அப்போஸ்டர் அமைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த பட ஷூட்டிங்கில் அடுத்தடுத்து ஏற்பட்ட உயிரிழப்புகளும் கேள்விக்குள்ளாகியுள்ளது. 3 பேர் ஷூட்டிங்கின்போது மாரடைப்பு காரணமாக உயிரிழக்க, ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News July 7, 2025
ஹாஸ்டலுக்கு நேரில் சென்று பாருங்கள்.. விளாசிய L.முருகன்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி ‘<<16973280>>சமூகநீதி<<>> விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், நீங்கள் அங்கு எப்போதாவது சென்றுள்ளீர்களா? என்று L.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, SC & ST ஹாஸ்டல்கள் உங்கள் தோல்வியுற்ற அரசின் கீழ் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.