News December 7, 2024
அதுக்குள்ள ₹400 கோடி வசூலா..?

‘புஷ்பா 2’ திரைப்படம் 2 நாளில் ₹400 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. இந்நிலையில், பெரும்பாலான ரசிகர்களை இப்படம் திருப்தி செய்துள்ளதால் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விரைவில் ₹1,000 கோடி கிளப்பில் இணையும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News April 2, 2026
அதிமுகவில் மீண்டும் இணைந்த OPS ஆதரவாளர்கள்

OPS ஆதரவாளர்கள் பலர் அண்மைக்காலமாக அதிமுகவிற்கே திரும்பி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் புவனேஸ்வரன் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர் பகுதிகளைச் சேர்ந்த பல நிர்வாகிகளும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். தனது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் இணைவது OPS தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்

ஈரான் போர் சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் சாகசம் செய்ய முயன்றால் முன்னெப்போதும் இல்லாத கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். அதோடு ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து வருவதாகவும், பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார்.