News August 10, 2024
400 கோழி, 55 ஆடு பலியிட்டு 2 நாள் கறி விருந்து

மேலூர் அருகே கல்லம்பட்டி முன்னமலை சுவாமி, ஆயி கருப்பன் சுவாமி கோயிலின் ஆடி மாத திருவிழா கடந்த 15 வருடங்களுக்கு பிறகு நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் மண்பானையில் தீர்த்தத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து, 400 நாட்டு கோழிகள் சமைத்து நேற்று விருந்து பரிமாறப்பட்டது. இன்று இதேபோல் 55 ஆடுகளை பலியிட்டு சமைத்து சாமிக்கு படையல் செய்து பொது கறி விருந்து நடைபெற்றது.
Similar News
News November 20, 2025
மதுரை: கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை!

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மகேஸ்வரன்(34). பெற்றோரை இழந்த இவர் அவருடைய சகோதரிக்கு கடன் வாங்கி திருமணம் செய்துள்ளார். கடன் தொல்லையால் இவர் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த இவர் நேற்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

உசிலம்பட்டி மற்றும் தும்மக்குண்டு மின் நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணியால், உசிலம்பட்டி நகர், பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, K.போத்தம்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள் கோவில்பட்டி, பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டியில் இன்று (நவ.20) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.