News March 2, 2025
40 ஆண்டு உள்நாட்டு போர் நின்றது

துருக்கியில் 40 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரை நிறுத்துவதாக குர்திஸ் தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது. தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாத வரை, இனி ஆயுதம் ஏந்தி போராட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளது. 1984 முதல் இந்த அமைப்பு உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்தது. இதனால் அந்த அமைப்பின் தலைவர் ஓசலான் 1999ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த போரில் 40,000 மக்கள் கொல்லப்பட்டனர்.
Similar News
News March 13, 2026
வரலாற்று சின்னங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான்

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற ஈரானின் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சின்னங்களை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு நூற்றாண்டு கூட நீடிக்காத ஒரு ஆட்சி, பண்டைய காலங்களைக் கொண்ட நாடுகளை வெறுப்பது இயல்பானது என்றும், ஆனால் யுனெஸ்கோ எங்கே? அதன் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 13, 2026
எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: US

ஈரான் தாக்குதலால் ஹார்முஸ் நீரிணையில் பல்வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய எண்ணெய் சரக்கு கப்பல்கள் காத்து கிடக்கின்றன. இந்நிலையில் ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு தாங்கள் பாதுகாப்பு வழங்க முடியாது; ஈரானை தாக்குவதில் தான் தங்கள் கவனம் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக ஹார்முஸ் நீரிணையை கப்பல்கள் துணிச்சலுடன் கடந்து செல்ல வேண்டும் என US கூறிய நிலையில், தற்போது பின்வாங்கியுள்ளது.


