News February 24, 2025
ராஜகோபுரத்தில் 40 அடி உயர வேல்: பக்தர்கள் பரவசம்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையொட்டி 137 அடி உயரமும், 9 நிலைகளும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 41 ஆண்டுகளுக்குப் பின் ராஜகோபுரத்தின் 9 கலசங்களும் கீழே இறக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜகோபுரத்தில் 40 அடி உயர பிரமாண்ட வேல் பொருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
Similar News
News February 24, 2025
விஜய் முதல்வராக வேண்டி முடி காணிக்கை

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வெற்றிக்கான கூட்டணிக் கணக்கை போடத் தொடங்கியிருக்கின்றன. இதில் புதிதாக உதயமான தவெக கட்சி தொண்டர்களும் தங்களது கட்சி வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். அதன் ஒருபகுதியாக விஜய் முதல்வராக வேண்டி, மதுரை அழகர்கோயிலில் உள்ள 18ம் படி கருப்பசாமிக்கு முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
News February 24, 2025
இலந்தக்கரையில் பழந்தமிழர்கள் நாகரிகம்

சிவகங்கையில் இலந்தக்கரை கண்மாய் பகுதியில் பழந்தமிழர்கள் பயன்படுத்திய சிவப்பு பானை ஓடுகள், ஜாடி குமிழிகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். அவை 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள். நல்லேந்தல், புரசடைஉடைப்பு பகுதிகளிலும் கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் காணப்படுகின்றன. இங்கு அகழாய்வு நடத்தினால் மற்றொரு கீழடியாக மாறும் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
News February 24, 2025
ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

ஜெயலலிதா சிலைக்கு TN அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதாவின் சிலை அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திமுக ஆட்சியில், எதிர்க்கட்சி தலைவர் ஒருவரின் பிறந்தநாளுக்கு அரசு மரியாதை செலுத்துவது நாகரீக அரசியல் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.