News August 31, 2025
40 ஆண்டுகளுக்கு பிறகு இரயில் சேவை

திருநள்ளாறு – பேரளம் இடையே 23.5 கி.மீ., தொலைவுக்கு கடந்த 1986ம் ஆண்டு அகலப்பாதையாக மாற்றும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (ஆகஸ்ட் 29) முதல் வரும் 8ம் தேதி வரை வேளாங்கண்ணி திருவிழாவிற்காக விழுப்புரம், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News September 1, 2025
10 மற்றும் +2 மாணவர்களுக்கு கற்றல் கையட்டினை வெளியிட்ட ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில் மாணவ-மாணவியர்களுக்கான “கற்றல் கையேட்டினை” தலைமையாசிரியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று வழங்கினார்கள்.
News September 1, 2025
தஞ்சை:Whatsapp-யில் ஒரு மெசேஜ் போதும், உடனடி தீர்வு !

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தஞ்சை மாவட்ட மக்கள் ‘94861-11912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News September 1, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 31) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.