News March 15, 2025
40 வயதிற்கு மேல் கண் பரிசோதனை அவசியம் – கலெக்டர்

குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2024ஆம் ஆண்டு 443 பேருக்கு கண் நீர் அழுத்த நோய் கண்டறியப்பட்டு 392 பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டு, 22 நோயாளிகளுக்கு லேசர் சிகிச்சையும், 30 பேருக்கு அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. குமரி அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அழகு மீனா நேற்று(மார்ச் 14) தெரிவித்துள்ளார். SHARE IT.
Similar News
News March 18, 2025
மக்கள் கூடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல் – குமரியில் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து ஓஆர்எஸ் தண்ணீர் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், வெப்ப அலைகளின் தாக்கம் குறித்து ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 17, 2025
குமரி: எரித்துக் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது

குமரி அருகே உள்ள லீபுரம் பாட்டுக்குளம் கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது இந்த நிலையில் அவர் யார் என்று அடையாளம் தெரிந்து உள்ளது. அவர் சிவகாசி விளாம்பட்டியை சேர்ந்தவர் என்றும் கொத்தனார் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News March 17, 2025
கன்னியாகுமரி வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம்(ஏப்ரல்) முதல் வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். குமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.