News April 20, 2024
சென்னையில் 4% வாக்குப்பதிவு குறைவு

சென்னையில் 2019 மக்களவைத் தேர்தலை விட, தற்போது 4% வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது. 2019ல் தென் சென்னையில் 57.07% வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 60.13% வாக்கு பதிவாகி உள்ளது. மத்திய சென்னையில் 2019ல் 58.98% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 54.27% வாக்குகள் பதிவாகி உள்ளது. வட சென்னையில் 2019ல் 64.26% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 60.13% வாக்குகளே பதிவாகி உள்ளன.
Similar News
News August 21, 2025
அதிகாலையிலேயே சரக்கு … சர்ச்சையாகும் தவெக மாநாடு

மதுரையில் TVK மாநாடு நடைபெறும் பகுதியில் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும், தவெக மாநாட்டு பந்தலுக்கு அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் அமர்ந்து தவெக தொண்டர்கள் மது அருந்தி கொண்டிருக்கும் PHOTO வெளியாகியுள்ளது. மாநாட்டுக்கு வரும்போதே சரக்கு வாங்கிட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாநாட்டின் போதும், மாநாட்டு பந்தலிலேயே TVK தொண்டர்கள் மது அருந்தியது சர்ச்சையானது.
News August 21, 2025
உங்களுக்கு ஒரு ‘குட்டி ஸ்டோரி’

மழை வேண்டி அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று ஒரு கிராமத்தினர் முடிவு எடுத்தனர். திட்டமிட்ட நாளில் அனைவரும் ஓரிடத்தில் கூடி, மிக பயபக்தியுடன் கடவுளிடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் கையில் குடையுடன் அங்கு வந்தான்….இது தானே நம்பிக்கை!
News August 21, 2025
சற்றுமுன்: கூட்டணியை அறிவிக்கிறார் விஜய்?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெக 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைபெறவிருக்கிறது. திமுக, அதிமுக பலமான கூட்டணியாக இருக்கும் நிலையில், விஜய் இதுவரை கூட்டணி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இன்றைய மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாடு 2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.