News April 25, 2025
26 பேர் பலியான நேரத்தில் ஆயுதமின்றி 4 போலீஸார்

பஹல்காம் சந்தைக்கும் பைசாரன் புல்வெளிக்கும் இடையிலான 6 கி.மீ தொலைவில், தாக்குதல் நடந்த அன்று ஆயுதமேந்திய எந்த போலீஸாரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. J&K-ன் SPO என்ற சுற்றுலா போலீஸார் 4 பேர், ஆயுதமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே அங்கு இருந்துள்ளனர். இதனாலேயே தாக்குதலுக்கு இந்த இடத்தை தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
Similar News
News December 6, 2025
மகளிர் உரிமைகளை மீட்க.. செளமியா அன்புமணி பயணம்

அன்புமணியின் TN மக்கள் உரிமை மீட்பு பயணத்தை தொடர்ந்து, செளமியா அன்புமணி மகளிர் உரிமை மீட்பு பயணத்தை இன்று தொடங்குகிறார். காஞ்சிபுரத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் அவர், அதிகாரத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்யவுள்ளார். மகளிர் வாக்குகளை கவர்வதற்கு அவர், இந்த பயணத்தை தொடங்குவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News December 6, 2025
புன்னகை அரசி சினேகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

வயசானாலும் அழகும், ஸ்டைலும், புன்சிரிப்பும் என்னிடம் மாறாது என்பது போல சினேகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளன. அதில், மிளிரும் ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிந்து தங்கம் போல சினேகா ஜொலி ஜொலிக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்த மெய்சிலிர்த்து போன ரசிகர்கள், ஹீரோயினாக நடிப்பதை ஏன் நிறுத்தினீர்கள் என்று SM-ல் கேட்கின்றனர். SWIPE செய்து நீங்களும் போட்டோக்களை பாருங்க
News December 6, 2025
டூத் பிரஷை மாற்றுவதற்கு இதுதான் சரியான நேரம்

சாஃப்டாக இருக்க வேண்டும், டங்க் கிளீனர் இருக்க வேண்டும் என்று நாம் தேடி தேடி வாங்கும் டூத் பிரஷை, குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றுவது அவசியமானது. 3 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் டூத் பிரஷை மாற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஒருவேளை இந்த 3 மாதத்திற்குள் நார் தேய்ந்தாலும் பிரஷை மாற்றிவிட வேண்டும். அதேபோல், காலாவதியான டூத் பிரஷை கொண்டு வேறு பொருள்களையும் சுத்தம் செய்யக்கூடாது. ஷேர் பண்ணுங்க.


