News September 20, 2025
ஜம்முவில் சிக்கிய 4 பயங்கரவாதிகள்

JK-வின் உதம்பூரில் பயங்கரவாதிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததால் அங்கு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயற்சித்தனர். இதனால், பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 4 பேரை பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.
Similar News
News September 20, 2025
துயரம்: தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மரணம்..

இந்தாண்டு தமிழ் சினிமாவுக்கு மிக துயரமான ஆண்டாக மாறியுள்ளது. சமீபத்தில் நடிகைகள் சரோஜா தேவி, பிந்து கோஷ், நடிகர்கள் மனோஜ், ராஜேஷ், நாகேந்திரன், கராத்தே ஹூசைனி, யுவராஜ் நேத்ரன், இயக்குநர் S.S. ஸ்டான்லி, மற்றும் ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் போன்றோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். தற்போது காமெடி நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்துள்ளார். இதில், பெரும்பாலும் உடல்நலக்குறைவால்தான் மரணித்து இருக்கின்றனர்.
News September 20, 2025
கூடுதல் தொகுதிகள் கேட்கும் திமுக கூட்டணி கட்சிகள்?

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற முழக்கம் எழுந்துள்ளது. இதனால், 2021-ல் 25 இடங்களில் போட்டியிட்ட காங்., இந்தமுறை கூடுதலாக 10 இடங்கள் கேட்க முடிவெடுத்துள்ளதாம். அதேபோல், விசிக, 2 பொதுத்தொகுதி உட்பட 10, இரு கம்யூ., கட்சிகளும் தலா 10 இடங்களிலும் போட்டியிட முடிவு எடுத்துள்ளதாம். இதனால், திமுக போட்டியிடும் இடங்கள் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News September 20, 2025
பட்ஜெட் விலை கார்கள் PHOTOS

பட்ஜெட் கார்கள் வாங்கும் நபர்கள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து கார் நிறுவனங்களும் குறைந்த விலையில் கார்களை களமிறக்கி வருகின்றனர். அந்த வகையில் 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் ஏராளமான கார்கள் உள்ளன. அதில் சிலவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. மேலும், இதில் இல்லாத கார் ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.