News March 25, 2025
குஜராத் அணியில் 4 தமிழக வீரர்கள்…!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது. அந்த அணியின் பிளேயிங் XI-ல், 3 தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சாய் கிஷோர், சாய் சுதர்சன், ஷாருக் கான் ஆகிய 3 வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்படுபவர்களின் லிஸ்ட்டில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?
Similar News
News November 9, 2025
பகலில் மது அருந்த தடை.. புதிய சட்டம் வந்தது

தலைப்பை பார்த்ததும் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்திருப்பார்கள். இந்த அறிவிப்பு தாய்லாந்தில் அமலுக்கு வந்துள்ளது. சுற்றுலா தேசமான தாய்லாந்தின் பொது இடங்களில் பகல் நேரத்தில் மது அருந்த தடை விதிக்கும் சட்டம் அமலாகியுள்ளது. இரவில் மட்டுமே மது அருந்த அனுமதி. இதனை மீறினால், ₹28,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் அமலானால் எப்படி இருக்கும்?
News November 9, 2025
1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2GB இலவசம்

தீபாவளியையொட்டி அறிவிக்கப்பட்ட BSNL-ன் ₹1 பிளான் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ₹1-க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் கால்ஸ் ஆகியவற்றை பெறலாம். புதிதாக சிம் வாங்குவோருக்கே இந்த ஆஃபர் பொருந்தும். நவ.15-ம் தேதியுடன் இந்த ஆஃபர் முடிவடைவதால் உடனே முந்துங்கள். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள BSNL மையங்களை அணுகவும். SHARE IT
News November 9, 2025
நீங்க சரியா தூங்குறீங்களா? ஈசியா செக் பண்ணுங்க!

இந்த அறிகுறிகள் இருக்கா? ✦தொடர்ந்து 7- 9 மணிநேரம் வரை நல்ல தூக்கம் வரும் ✦படுக்க சென்ற 10- 20 நிமிடங்களுக்குள் தூக்கம் வந்துவிடும் ✦ஒன்று அல்லது இரண்டு முறை விழிப்பதை தவிர்த்து, நல்ல தூக்கம் கிடைக்கும் ✦காலையில் எனர்ஜியாக உணருவீர்கள் ✦தூங்கி எழுந்ததும், நன்கு உறங்கிய திருப்தி கிடைக்கும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் நன்றாக உறங்குகிறீர்கள் என அர்த்தம். SHARE IT.


