News June 8, 2024
மத்திய அமைச்சரவையில் TDPக்கு 4 இடங்கள்?

மத்தியில் அமையவுள்ள மோடி தலைமையிலான அரசுக்கு தெலுங்கு தேசம் தனது ஆதரவை அளித்துள்ளது. இதையடுத்து புதிய அமைச்சரவையில் அக்கட்சிக்கு 4 இடங்கள் அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் 2 கேபினட் அமைச்சர் பதவி என்றும், எஞ்சிய 2 பதவிகள் இணை அமைச்சர் பதவி என்றும் கூறப்படுகிறது. பவன் கல்யான் கட்சிக்கும் இணை அமைச்சர் பதவி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
Similar News
News September 24, 2025
யுவராஜ் சிங்கிடம் 7 மணி நேரம் ED விசாரணை

ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரங்கள் வாயிலாக ஊக்குவித்த பிரபலங்களை ED விசாரித்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் ரெய்னா, உத்தப்பா உள்ளிட்டோரிடமும் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று யுவராஜ் சிங்கிடம் கிட்டத்தட்ட 7 மணி நேரம் ED அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். யுவராஜ் அளித்த பதில்களை ED வாக்குமூலமாக பதிவு செய்துள்ளது. பாலிவுட் நடிகர் சோனு சூட் இன்று ED முன் ஆஜராக உள்ளார்.
News September 24, 2025
புரட்டாசி 3-ம் நாள்: இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!

நவராத்திரியின் 3-ம் நாளில் இந்த வாராஹி மந்திரத்தை சொல்லுங்கள்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா.
பொருள்:
செல்வ வளத்தையும், பாதுகாப்பையும், கவர்ச்சி & ஈர்ப்பு சக்தி தருபவளுமான வாராஹி தேவியை வணங்குகிறேன். அவர் எல்லா சித்திகளின் உருவமாக இருக்கிறார். என் தடைகள் அனைத்தும் நீங்கி, சுபீட்சம் பொங்கட்டும். SHARE.
News September 24, 2025
மகளிர் உரிமைத் தொகை: உதயநிதி கொடுத்த குட் நியூஸ்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களிடம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஓரிரு மாதங்களில் கூடுதல் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை உதயநிதி கூறியுள்ளார். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு தீபாவளி பரிசாக அக்டோபர் 15-ம் தேதி முதல்கட்ட பணம் அனுப்பப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.