News August 3, 2024
புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 2 நாள்களுக்கு முன் நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமி, இலங்கை படையின் ரோந்து படகு மோதி பலியானார். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 4 பேரை தற்போது, எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 15, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 15, தை 1 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 1:00 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News January 15, 2026
ELECTION: தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா SDPI?

மக்களுக்காக உழைப்பதற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக SDPI தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மாஸ் லீடராக வரும் விஜய், மக்களுக்கு பணி செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் எங்கள் கட்சி மாநில குழு கூட்டம் நடைபெறும். அதில் தவெகவா அல்லது யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 15, 2026
சிறு வீட்டுப் பொங்கல்…!

சிறு வீட்டுப் பொங்கல் என்பது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வழக்கத்தில் உள்ள நடைமுறை. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து, தாங்களாகவே வீடுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் அருகில் பொங்கல் வைத்து படையலிட்டு சாமி கும்பிட்டு மகிழ்வார்கள். தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உங்கள் பகுதியில் இம்மாதிரி செய்வதுண்டா?


