News April 12, 2025

ஆட்டை பலி கொடுக்க போன இடத்தில் 4 பேர் பலி!

image

இதை சோகம் என்பதா? அதிசயம் என்பதா? ம.பி.யில் மத சடங்கிற்காக, ஆட்டை பலி கொடுக்க 6 பேர் காரில் வேகமாக சென்றுள்ளனர். சாவை நோக்கி வேகமாக போய்க்கொண்டிருந்த ஆட்டை விதி காப்பாற்றியது. கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில், காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைய, இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அந்த ஆடுக்கு ஒன்றும் ஆகவில்லை. விதி வலியது!

Similar News

News November 22, 2025

பஞ்சாங்கத்தை மாற்றக்கூடியவர் CM: சேகர் பாபு

image

<<18347216>>பஞ்சாங்கப்படி<<>> எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, பஞ்சாங்கத்தையே மாற்றக்கூடிய மதிநுட்பம் கொண்டவர் CM ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார். 2021-ல் இதே பாஜக, ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை, ஆட்சியமைக்க மாட்டார் என்று சொன்னதாக குறிப்பிட்ட அவர், அப்போதிருந்தே அவர்களுக்கு CM தோல்வியையே பரிசாக அளித்து வருவதாக கூறினார்.

News November 22, 2025

மறைந்தார் பன்முக வித்தகர் ஈரோடு தமிழன்பன்

image

மறைந்த <<18358061>>ஈரோடு தமிழன்பன்<<>> திரைத்துறையிலும் பணியாற்றி இருக்கிறார். 1984-ல் ’அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் ’கரிசல் தரிசு’ & ’கையில காசு’ ஆகிய 2 பாடல்களை எழுதியிருக்கிறார். அத்துடன், ’நீயும் நானும்’ படத்திலும் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். இயக்கத்திலும் ஆர்வம் இருந்ததால், 1983-ல் ’வசந்தத்தில் வானவில்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அப்படம் ரோம் திரைப்பட விழாவில் விருது வென்றது.

News November 22, 2025

இனி தனியாரும் அணு மின்சக்தியில் காலூன்றலாம்!

image

வரும் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், 10 புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்கல்வி, தேசிய நெடுஞ்சாலை, காப்பீடு என பல துறைகளில் மறுசீரமைப்பு கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக, இதுவரை அரசு மட்டுமே தொடங்கி நடத்தி வந்த அணு மின் நிலையங்களை, இனி தனியாரும் நடத்தும் வகையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

error: Content is protected !!