News January 10, 2025

PERFUME பாட்டில் வெடித்து 4 பேர் காயம்!

image

செல்போன் வெடித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பெர்ஃப்யூம் பாட்டில் வெடிக்குமா? ஆம், மும்பையில் பெர்ஃப்யூம் பாட்டில் வெடித்து கணவன், மனைவி, 2 குழந்தைகள் என 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பெர்ஃப்யூம் பாட்டிலின் EXPIRY DATE-ஐ தீப்பற்றும் பொருட்களை கொண்டு மாற்றிய போது இச்சம்பவம் நேரிட்டதாக தெரிகிறது. பொதுவாகவே, பெர்ஃப்யூம்கள் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால் அதை பயன்படுத்தும் போது கவனம் தேவை.

Similar News

News August 23, 2025

தலையில்லாத விநாயகர் கோயில்!

image

புராணங்களின் படி, பார்வதி நீராடச் சென்றபோது, வெளியே விநாயகர் காவலுக்கு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிவனை, விநாயகர் உள்ளே செல்ல விடாமல் தடுக்க, கோபமடைந்த சிவன் விநாயகரின் தலையைத் துண்டித்தார். தலை துண்டிக்கப்பட்ட இடமாக கருதி, உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் முன்கடியா என்ற கிராமத்தில் தலையில்லாத விநாயகர் கோயில் அமைந்துள்ளது. SHARE IT.

News August 23, 2025

விஜய்யை பூமர் என கலாய்த்த அண்ணாமலை

image

‘அங்கிள்’ என ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் பேசியிருப்பது சரியில்லை என்றும், விஜய்யை ‘பூமர்’ மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவரது மனது கஷ்டப்படாதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியை வெற்றிப் பெற செய்து, EPS-யை CM ஆக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.

News August 23, 2025

என்னிடம் கற்றதை விஜய் சொல்கிறார்: சீமான்

image

TVK மாநாட்டில் விஜய் விதை நெல் கதை கூறினார். இக்கதையை சீமான் 2021 தேர்தலின் போது தெரிவித்ததாகவும், <<17483040>>அதனை விஜய் காப்பியடித்தாகவும் விமர்சனங்கள் எழுந்தன.<<>> இதுபற்றி பேட்டியளித்த சீமான், கதையாக இருந்தாலும், முதலில் கூறியது நான் என்றும், இளவரசன் கதையாக தான் கூறியதை, தளபதி கதையாக விஜய் சொல்லிவுள்ளதாகவும் தெரிவித்தார். அண்ணனிடம் கற்றதை தம்பி சொல்கிறார். நானும் எங்கேயே கற்றதுதானே, அதில் தவறில்லை என்றார்.

error: Content is protected !!