News March 19, 2024
கோர விபத்தில் 4 பேர் பலி

திருநெல்வேலியில் இருந்து சென்ற டெம்போ டிராவலர் வாகனம் கேரளாவின் மலைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து இடுக்கிக்கு சுற்றுலாவுக்காக 20 பேருடன் சென்ற வாகனம், அடிமாலி அருகே சென்று கொண்டிருக்கும்போது மலையில் இருந்து கவிழ்ந்தது. இதில் 3 வயது குழந்தை உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News December 4, 2025
BREAKING: அதிகாலை பயங்கர நிலநடுக்கம்

வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆகவும், அதிகாலை 4.45 மணிக்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4-ஆகவும் பதிவாகியுள்ளது. இதனால், ஏற்பட்ட உயிரிழப்பு, பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
News December 4, 2025
Business 360°: சேவைத்துறை வளர்ச்சி அதிகரிப்பு

*கடந்த நவம்பரில், நாட்டின் சேவைத்துறை 59.8 புள்ளிகளை பெற்று வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் *பூஷான் பவர்ஸ் நிறுவனத்தில் ஜப்பானின் ஜே.எப்.இ ஸ்டீல்ஸ் நிறுவனம் ₹15,750 கோடி முதலீடு *இந்தியாவில் 5 லட்சம் கார்களை விற்றுள்ளதாக ஸ்கோடா அறிவிப்பு *ரிலையன்ஸின் எண்ணெய் நிறுவனமான நயாரா, கடந்த நவம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்கியுள்ளது.
News December 4, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தார்

2026 தேர்தல் வரவிருப்பதால், திமுகவும், அதிமுகவும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி – எஸ்.பி.வேலுமணி இடையே மாற்றுக்கட்சியினரை இணைப்பதற்கான போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


