News March 1, 2025
மின்சாரம் தாக்கி 4 பேர் பலி: ஸ்டாலின் இரங்கல்

<<15623438>>கன்னியாகுமரி<<>> அருகே மின்சாரம் தாக்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மின்சாரம் தாக்கி, விஜயன், சோபன், மனு, ஜெஸ்டிஸ் உயிரிழந்த செய்தியறிந்து வருத்தமும் வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார். அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்ததோடு, CM பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 17, 2026
FLASH: காருடன் எரிந்த நிலையில் கிடந்த 4 சடலங்கள்!

நெல்லை, திசையன்விளை பகுதியில் உள்ள பனங்காட்டில் சொகுசு கார் ஒன்றில் எரிந்த நிலையில், 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை கைப்பற்றிய போலீசார் மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையில் இறங்கியுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
News March 17, 2026
தவெகவுடன் கூட்டணியா? நயினார் மழுப்பல்

அதிமுக கூட்டணியில் தவெக இணையவுள்ளதாக வெளியாகும் தகவலே தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாபிக். இதனை தவெகவும், EPS-ம் மறுத்துள்ள நிலையில், இதுபற்றி தனக்கு தெரியாது என நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் NDA உடன் மறைமுக பேச்சுவார்த்தையில் இப்போதும் தவெக உள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதுபற்றி விஜய் கூறினால் மட்டுமே தெளிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.
News March 17, 2026
தமிழகத்தின் எதிர்காலம் அண்ணாமலை: பவன் கல்யாண்

அண்ணாமலையிடம் அபாரமான ஆற்றல் உள்ளது; ஆனால் அந்த ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்படாமல், வெளியே கொண்டு வரப்படாமல் இருப்பதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அண்ணாமலை மிகவும் உறுதியான ஒரு தலைவர், தமிழகத்திற்கு தற்போது தேவைப்படுவதும் இத்தகைய தலைமைதான் எனக் கூறிய அவர், அண்ணாமலை தனது பொறுப்பை சிறப்பாக கையாண்டால் தமிழகத்தின் எதிர்காலமாக திகழ்வார் எனவும் தெரிவித்துள்ளார்.


