News February 25, 2025
மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெடகாகனி என்ற இடத்தில் பள்ளம் தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது எப்படி நடந்தது என்பது பற்றி விரிவான தகவல் இல்லை. உயிரிழந்த நால்வரில் ஒருவர் விவசாயி, மற்ற மூவர் கூலிகள் என்று சொல்லப்படுகிறது.
Similar News
News February 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 189
▶குறள்:
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
▶பொருள்: ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?.
News February 25, 2025
அதிஷி குற்றச்சாட்டை மறுத்த பாஜக

டெல்லி முதல்வர் அறையில் அம்பேத்கர், பகத்சிங் படங்கள் உள்ளதாக அதிஷி குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மியில் கெஜ்ரிவால் மட்டுமே இதுவரை பொய் பேசுவார் என நினைத்திருந்ததாகவும், அவரையே அதிஷி விஞ்சி விட்டதாகவும் அக்கட்சி விமர்சித்துள்ளது. முன்னதாக, டெல்லி முதல்வர் அறையில் AAP ஆட்சியில் இடம்பெற்றிருந்த அம்பேத்கர், பகத்சிங் புகைப்படம் அகற்றப்பட்டதாக அதிஷி குற்றஞ்சாட்டியிருந்தார்.
News February 25, 2025
தோல்வி எதிரொலி: பயிற்சியாளரை நீக்க PCB முடிவு

CT தொடரில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஆகிப் ஜாவித்தை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு (PCB) செய்துள்ளது. CT தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணியிடம் PAK தோல்வி அடைந்ததால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. இதனால் அதிருப்தியான PCB, இடைக்கால தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளரை விடுவிக்க முடிவு செய்துள்ளது.