News August 17, 2024
ஒரு பேங்க் அக்கவுண்டிற்கு 4 நாமினிகள்

ஒரு பேங்க் அக்கவுண்டிற்கு 4 நாமினிகளை நியமிக்கும் முறை, விரைவில் அமலுக்கு வரவுள்ளது. வங்கியில் கணக்கு வைத்திருப்போர், நாமினியாக தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை நியமிக்கும் முறை தற்போது உள்ளது. இதை மாற்றும் வகையில், ஒரு அக்கவுண்டிற்கு 4 பேரை நாமினிகளாக நியமிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கலாகியுள்ளது. இது நிறைவேறினால், வங்கி வாடிக்கையாளர்கள் பயனடைவர் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
Similar News
News November 8, 2025
ஆதார் கார்டில் மாற்றம்… இனி வீட்டில் இருந்தே செய்யலாம்!

இந்தியாவின் முக்கிய அரசு ஆவணமாக உள்ள ஆதாரில் ஏதேனும் திருத்தம் செய்ய, ஆதார் மையங்களுக்கே நேரில் செல்ல வேண்டும். ஆன்லைனில் செய்யலாம் என்றாலும், கைரேகை, முக அடையாளத்தை பதிவு செய்ய நேரில் தான் செல்ல வேண்டும். இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் ஒரு புதிய ஆப்பை (e-Aadhaar) அறிமுகம் செய்ய உள்ளது. இதில், AI மூலம் கைரேகை, முக அடையாளம் உறுதிப்படுத்தப்படும். டிசம்பர் இறுதிக்குள் இந்த வசதி அறிமுகமாக உள்ளது.
News November 8, 2025
உண்மையில் DNA வடிவத்தை கண்டுபிடித்தது யார்?

டபுள் ஹெலிக்ஸ் DNA-வை கண்டுபிடித்தவர் <<18233802>>ஜேம்ஸ் வாட்சன்<<>> அல்ல. இவருக்கு முன்பே ரோசலிண்ட் பிராங்க்லின் என்ற பெண் இதனை கண்டுபிடித்தார் என கூறப்படுகிறது. UK-வின் கிங்ஸ் காலேஜில் DNA-வின் படத்தை ரோசலிண்ட் வைத்திருந்தார். அந்த காலேஜுக்கு வாட்சனும் அவரது ஜூனியர் கிரிக்கும் சென்றபோது அதனை பார்த்ததாகவும், அதை வைத்தே டபுள் ஹெலிக்ஸ் வடிவத்தை கண்டுபிடித்து, நோபல் பரிசும் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
News November 8, 2025
இடி மின்னலால் தடைபட்ட IND VS AUS ஆட்டம்

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இடி மின்னலின் தாக்கத்தால் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்பட்டது. அதேசமயம் தற்போது வரை மழை பெய்யாததால் விரைவில் ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்களை எடுத்துள்ளது.


