News August 20, 2025
கூலி படத்தில் 4 நிமிட காட்சிகள் நீக்கம்

கூலி படத்திலிருந்து 4 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் கூலி திரைப்படம் மறு தணிக்கை செய்யப்பட்டு இருக்கிறது. ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் படத்தில் இருந்து கட் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து சிங்கப்பூரில் பெற்றோர் அனுமதியுடன் அனைவரும் படம் பார்க்க தணிக்கை சான்றிதழ் தரப்பட்டுள்ளது. தமிழகத்திலும் U/A சான்று கேட்டு தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. U/A கிடைக்குமா ?
Similar News
News February 6, 2026
உங்க ஆளுக்கு என்ன கலர் ரோஸ் கொடுக்கணும்?

காதலர் தின சீசன் தொடங்கிவிட்டது. முதல் நாளாக நாளை ரோஸ் டே கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ரோஸுக்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உள்ளது. அதுபோல, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கேரக்டர் இருக்கும். உங்கள் காதலரின் குணாதிசயத்திற்கு ஏற்றவாறு என்ன ரோஜாவை பரிசாக அளிக்கலாம் என்பதை உங்களுக்காக கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe பண்ணி தெரிஞ்சிக்கோங்க. நீங்க என்ன கலர் ரோஸ் கொடுக்க போறீங்க?
News February 6, 2026
லோன் வாங்கியவர்களுக்கு இப்படியொரு சோகச் செய்தியா

வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக நீடிக்கும் என்ற அவர், பணவீக்கம் அதிகரிக்க தொடங்கியதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, வட்டி விகிதம் 0.25% குறைக்கப்படலாம், வீட்டு லோன் குறையும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
News February 6, 2026
இதுவல்லவா இனிய தொடக்கம்!

பிரமாண்ட மேடைகள், ஆயிரக்கணக்கில் விருந்தினர்கள் போன்றவை வேண்டாமென்று முடிவெடுத்த இவர்கள், பணத்தை வீணாக்காமல் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த வீட்டிலேயே நெருங்கிய நண்பர்களுடன் & உறவினர்களின் முன்னிலையில், எளிமையாக திருமணமும் செய்து கொண்டனர். ‘ஒருநாள் ஷோவுக்காக கடன் வேண்டாம், வாழ்நாள் நிம்மதிதான் முக்கியம்’ என இவர்களின் முடிவு, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாகும். நீங்க என்ன சொல்றீங்க?


