News March 20, 2024
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வந்த ராமச்சந்திரன், மனைவி விசித்ரா மற்றும் மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், எதற்காக அவர்கள் தற்கொலை செய்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
பட்டாவில் புதிய மாற்றம்.. தமிழக அரசு அறிவித்தது

வில்லங்க சான்று(EC) போல, பட்டாவின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் ‘பட்டா வரலாறு’ என்ற புதிய சேவையை அடுத்த வாரம் TN அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இதன்மூலம், அந்த நிலத்தின் உரிமையாளர், பட்டா எந்த காலகட்டத்தில் யார் யாருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்களை எளிமையாக அறிய முடியும். <
News November 21, 2025
50,000 சிறுவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?

நல்லது, கெட்டது தெரியாத வயதில் குற்றம் செய்யும் சிறுவர்கள், கூர்நோக்கு இல்லத்தில் பராமரிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்கவே தனி சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கூர்நோக்கு நீதி வாரியங்களிலும் மெத்தனம் காட்டப்படுவதால், 50,000 சிறுவர்கள் நீதி கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். நாடு முழுவதும் 362 கூர்நோக்கு இல்லங்களில், 55% வழக்குகள் முடிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
News November 21, 2025
BREAKING: விஜய் உடன் கூட்டணி இல்லை.. முடிவை அறிவித்தார்

TN-ல் கூட்டணி மாற்றம் வேண்டாம் என ராகுல் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 18-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கார்கே இதனை, தமிழக நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் திமுகவுடன் கூட்டணி தொடர்வதாக <<18343041>>செல்வப்பெருந்தகை<<>> நேற்று கூறியிருந்தார். சில நாள்களாக பேசப்பட்டு வந்த காங்., – தவெக கூட்டணி விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


