News July 23, 2024

4 மதிப்பெண்களை இழக்கும் 4 லட்சம் மாணவர்கள்

image

நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வில், 29வது கேள்விக்கு 2 சரியான விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கேள்விக்கு கொடுக்கப்படும் 4 தேர்வுகளில் 1 மட்டுமே சரியான விடையாக இருக்க வேண்டும் என ஆணையிட்டது. இதன்மூலம் 4 லட்சம் மாணவர்கள் 4 மதிப்பெண்களை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், 720/720 எடுத்த 61 பேரில் 44 பேர் மதிப்பெண்களை இழக்க நேர்ந்துள்ளது.

Similar News

News December 3, 2025

போன் எடுத்தால் Hello சொல்லாதீங்க: Scam நடக்குது!

image

Unknown நம்பரில் இருந்து வரும் Call-ஐ Attend செய்தவுடன் Hello என சொல்லாதீங்க. ஏனென்றால் எதிரில் இருக்கும் Scammers அந்த Hello-வை ரெக்கார்ட் செய்து, AI மூலம் உங்கள் குரலை குளோனிங் செய்கின்றனர். இதைவைத்து நீங்கள் பேசுவது போல பேசி, உங்களுக்கு தெரிந்தவர்களிடமிருந்து பணம் பறிக்கலாம். எனவே உங்களுக்கு போன் செய்யும் நபர் பேசிய பின், நீங்கள் பேசத்தொடங்குங்கள் என சைபர் போலீஸ் எச்சரிக்கின்றனர். SHARE.

News December 3, 2025

இந்த நாள்களை மறந்துடாதீங்க!

image

விஜய் ஹசாரே தொடரில் வரும் 24-ம் தேதி ஆந்திரா, 26-ம் தேதி குஜராத், ஜனவரி 6-ம் தேதி ரயில்வே ஆகிய அணிகளுக்கு எதிராக டெல்லி வீரராக கோலி களமிறங்குகிறார். கடைசியாக 2010-ம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் கோலி விளையாடி இருந்தார். முன்னதாக, 2027 ODI WC-ல் விளையாட உடற்தகுதி & ஃபார்மை தக்கவைத்து கொள்ள, உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவருக்கு BCCI அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 3, 2025

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ₹90.14 ஆக சரிவு

image

டாலருக்கு($) நிகரான ரூபாயின்(₹) மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹90.14 ஆக சரிந்துள்ளது. கடந்த ஜனவரியில் ₹86.45 ஆக இருந்த ₹ மதிப்பானது பல மாதங்களாக பெரிய அளவில் மாற்றமின்றி நீடித்தது. ஆனால், தற்போது USA வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் சரிவை கண்டுள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருள்களுக்கான செலவு இந்தியாவில் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!