News April 27, 2025
வெடி விபத்தில் 4 பேர் பலி: ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கும் CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
Similar News
News January 6, 2026
புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும். இதனால் ஜன.9-ல் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், ஜன.10-ல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
News January 6, 2026
உலகில் அதிகம் திருடப்படும் பொருள் எது தெரியுமா?

திருட்டு என்றாலே பலருக்கும் பணம், நகை என்றுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் அதிகம் திருடப்பட்ட பொருள் என்ன என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், உலகில் அதிகம் திருடப்படும் பொருள் என்றால் பாலாடைக்கட்டி என்ற சீஸ் தான் என ஆய்வுகள் கூறுகின்றன. அதிக விலை, அதிக சுவை மற்றும் எளிதில் மறைக்க கூடியது என்பதால் உலகம் முழுவதும் அவை எளிதில் திருடப்படும் பொருளாக உள்ளது.
News January 6, 2026
சின்மயியை நீக்கிய மோகன் ஜி

திரெளபதி 2 படத்தில் ’எம்கோனே’ பாடலை பாடிய சின்மயிக்கு பதிலாக வேறு பாடகியை பாட வைக்க உள்ளதாக மோகன் ஜி தெரிவித்துள்ளார். முன்னதாக, எம்கோனே பாடலை பாடியதற்காக <<18438965>>மன்னிப்பு<<>> கேட்டுக்கொள்கிறேன். மோகன் ஜி படம் என தெரிந்திருந்தால் பாடியிருக்கவே மாட்டேன் என X-ல் சின்மயி பதிவிட்டது சர்ச்சையானது. அவரது கருத்துக்கு அப்போதே வருத்தம் தெரிவித்த நிலையில், தற்போது சின்மயியின் குரலை நீக்குவதாக இயக்குநர் கூறியுள்ளார்.


