News September 19, 2025

சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்

image

சபரிமலை துவார பாலகர்களின் சிலையில் வேயப்பட்ட தங்க கவசத்தில் 4 கிலோ குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவசத்தில் பழுது ஏற்பட்டதாக கூறி, சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. ஆனால், கோர்ட் அனுமதி இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையானதால், அதை மீண்டும் கொண்டு வந்து சோதித்த போது, தங்கம் குறைந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 8, 2026

எல்லை பாதுகாப்பு பணிகளில் ரோபோ

image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் எல்லை காவலுக்கான ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்று அம்மாநில CM தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவித்துள்ளார். -40°C வரையிலான கடும் குளிரிலும் இந்திய எல்லைகளை காவல் காக்கும் ரோபோக்கள் தயாரிக்கப்படும் என்றும், சீனாவுக்கு இணையாக இந்தியாவிலும் ரோபோக்களை உருவாக்குவோம் என்றும் கூறினார். மேலும், அடுத்த ஆண்டில் முதல் ரோபோ முன்மாதிரி உருவாக்கப்படும் என்றார்.

News March 8, 2026

நிதிஷ்குமாரின் பதவி பறிக்கப்பட்டதா? வானதி

image

நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி EPS-க்கு ஏற்படும் என ஸ்டாலின் வைத்த விமர்சனத்துக்கு வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார். ராஜ்யசபாவுக்கு செல்ல வேண்டும் என்பது நிதிஷின் சொந்த முடிவு என்றும், பிஹாரில் பாஜக அதிக MLA-க்கள் பெற்றும் 2 முறை அவரை முதல்வராக்கினோம் எனவும் தெரிவித்துள்ளார். பாஜக வந்துவிடும் என மக்களை ஸ்டாலின் பயமுறுத்த பார்க்கிறார், ஆனால் ஏற்கனெவே இங்கு பாஜக வந்துவிட்டது என கூறியுள்ளார்.

News March 8, 2026

ராசி பலன்கள் (08.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!