News February 25, 2025
மகா சிவராத்திரியில் உச்சரிக்க வேண்டிய 4 கால பூஜை மந்திரம்

சிவராத்திரியின் 4 கால பூஜையில் ஈசனுக்கு இந்த மந்திரத்தை சொல்லி கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். அதன்படி, முதல் கால பூஜையில் (இரவு 7:30 மணி) ‘ஓம் அம்பலத்தாடியே போற்றி ஓம்’ *2ம் கால பூஜையில் (இரவு 10:30 மணி) ‘ஓம் ஈசனே போற்றி போற்றி’ *3ம் கால பூஜையில் (இரவு 12:00 மணி) ‘ஓம் கயிலை நாதனே போற்றி போற்றி’ *4ம் கால பூஜையில்(அதிகாலை 4:00 மணி) ‘ஓம் சிவ சிவ போற்றி ஓம்’ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும்.
Similar News
News February 25, 2025
உக்ரைன் அடிபணிய தேவையில்லை: பிரான்ஸ்

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து US அதிபர் டிரம்புடன் ஆலோசித்ததாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறியுள்ளார். டிரம்புடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைதிக்காக உக்ரைன் அடிபணிய வேண்டிய அவசியம் ஏற்படாது. உக்ரைனின் இறையாண்மையை காக்கும் வகையில் அந்த அமைதி இருக்கும் என்றார். அடுத்த வாரம் உக்ரைனுடன் அரிய இயற்கை வளங்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக டிரம்ப் கூறினார்.
News February 25, 2025
5 பேர் கொலை வழக்கு: 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனை

நெல்லை அருகே 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கோயிலில் சாமி ஆடுவது, ஆடு காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அத்தாளநல்லூரில் 5 பேர் 2009ம் ஆண்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 14 பேர் கைதான நிலையில், 3 பேர் இறந்து விட்டனர். இதனால் 10 பேருக்கு 4 ஆயுள், ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News February 25, 2025
அதிமுக எம்எல்ஏ வீட்டில் ரெய்டு

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது எம்எல்ஏ வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது.