News August 2, 2024
ஒரே நாளில் வெளியான 4 படங்கள்

சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள போட் உள்ளிட்ட 4 படங்கள் இன்று ரிலீஸ் ஆகியுள்ளன. இசைஞானி இளையராஜா இசையமைத்து, பாரி இயக்கியுள்ள ‘ஜமா’ படமும், விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. மேலும், நடிகை காயத்ரி, பாலா சரவணன் நடிப்பில் பேச்சி படமும் இன்று ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 27, 2025
கோலிக்கு பரிசுத் தொகை இவ்வளவுதானா?

விஜய் ஹசாரே டிராபியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், டெல்லி அணிக்காக விளையாடி, 77 ரன்கள் எடுத்த கோலிக்கு ஆட்ட நாயகன் (POTM) பரிசுத் தொகையாக ரூ.10,000 காசோலை வழங்கப்பட்டது. இந்நிலையில், பெரிய வீரரான கோலி ₹10,000 காசோலையை வாங்குவது வேடிக்கையாக உள்ளதாக, SM-ல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News December 27, 2025
தமிழக சிறுமிக்கு மத்திய அரசு உயரிய விருது

உயிரை துச்சமாக நினைத்து சிறுவனை காப்பாற்ற முயன்ற போது உயிரை இழந்த கோவை சிறுமி வியோமா பிரியாவுக்கு பால புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறுமியின் தாயார் அர்ச்சனா அந்த விருதை ஜனாதிபதியிடம் இருந்து கனத்த இதயத்துடன் பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு மே 23-ம் தேதி சரவணம்பட்டி அருகே பூங்காவில் மின்சாரம் தாக்கி துடித்த சிறுவனை, வியோமா பிரியா துணிச்சலாக மீட்க போராடி உயிரை பறிகொடுத்தார்.
News December 27, 2025
ராசி பலன்கள் (27.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


