News December 31, 2024
4 கிரகணங்கள்… இந்தியாவில் ஒன்றுதான் தெரியும்!

2025ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 4 கிரகணங்கள் தெரியவுள்ளன. ஆனால், இதில் ஒரேயொரு கிரகணம் மட்டுமே இந்தியாவிலிருந்து பார்க்க முடியும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். அதாவது, செப். 7-8ஆம் தேதிகளில் (8:58 PM – 2:25 AM) நிகழும் முழு சந்திர கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் தென்படும். உலகளவில், மார்ச் 14இல் சந்திர கிரகணம், மார்ச் 29இல் & செப்.21-22ஆம் தேதிகளில் சூரிய கிரகணம் நிகழவுள்ளன.
Similar News
News December 4, 2025
குமரி: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

குமரி மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். <
News December 4, 2025
ஸ்டாலினின் சூழ்ச்சியால் பிரச்னை எழுந்தது: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போலீசாரை வைத்து கலவரத்தை தூண்டும் வகையில் CM ஸ்டாலின் செயல்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஸ்டாலினின் பிரித்தாலும் சூழ்ச்சியினால் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். தேர்தல் நெருங்கிவருவதால் திமுக நடுக்கத்தில் இவ்வாறு செயல்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News December 4, 2025
சமந்தா கணவரின் EX மனைவி எமோஷனல் பதிவு

சமந்தா உடனான திருமணம் நடந்து 3 நாள்களுக்கு பிறகு, ராஜ் நிடிமோருவின் EX மனைவி ஷியாமளி தனது இன்ஸ்டாவில் எமோஷனல் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த காலங்களில் பல நாள்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், அப்போது தனக்கு துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி எனவும் அவர் அதில் கூறியுள்ளார். மேலும், கவன ஈர்ப்பிற்காகவோ, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து டிராமா நடத்தவோ இதை பதிவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


