News March 22, 2024
4 மாவட்டங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், ஈரோடு 102 டிகிரி F, கரூர் (பரமத்தி), சேலம் மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் தலா 100 டிகிரி F வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலையில் நீடிக்கும் என்பதால் பகல் 12-3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News January 22, 2026
தஞ்சை: சுவாமிமலை கோயிலுக்கு வந்த பக்தர் தற்கொலை!

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை கோயிலுக்கு பெங்களூருவைச் சேர்ந்த பூபாலன் (42) என்பவர் வருகைந்துள்ளார். இந்த நிலையில் இவர், சுவாமிமலை கலைஞர் நகருக்கு எதிரே அமைந்துள்ள நவீன மின்சார தகன மேடைக்கு பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 22, 2026
BREAKING: நடிகர் முரளி கிருஷ்ணா காலமானார்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா (65) காலமானார். ஜானகியின் ஒரே மகனான இவர் பரதநாட்டிய கலைஞர் ஆவார். அத்துடன், ’விநாயகுடு’, ‘மெல்லபுவு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், ‘கூலிங் கிளாஸ்’ என்ற மலையாள படத்தில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு, திரையுலகினர் மற்றும் எஸ்.ஜானகியின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 22, 2026
BREAKING: 7 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான சோகம்!

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், பல தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


