News March 19, 2025
4 நாள்கள் தொடர் விடுமுறை!

இம்மாத இறுதியில் 4 நாள்கள் தொடர் விடுமுறை வரவுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 31 ரம்ஜான் பண்டிகை (திங்கட்கிழமை), ஏப்ரல் 1 வங்கிக் கணக்கு முடிவு நாள் அரசு பொது விடுமுறை நாளாகும். இதனால், இப்போதே சோஷியல் மீடியாவில் இது குறித்த மீம்ஸ்கள் டிரெண்டாகத் தொடங்கியுள்ளன. இந்த விடுமுறையில் உங்க பிளான் என்ன?
Similar News
News March 19, 2025
தஞ்சை துக்காச்சியம்மன் கோயிலுக்கு UNESCO விருது

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள துக்காச்சியம்மன் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி கெளரவித்துள்ளது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் தொன்மை மாறாமல், புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், விருது வழங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் துர்கை அம்மன் இறைவனை வழிபட்டதால், துர்க்கை ஆட்சி என்ற பெயர் துக்காச்சி என மருவியதாக சொல்லப்படுகிறது.
News March 19, 2025
புதிய பட்ஜெட் பைக் அறிமுகம்

பட்ஜெட் ப்ரெண்ட்லியான பைக் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குத்தான் இந்த செய்தி. ரூ.68,767-க்கு SHINE 100 என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். கருப்புடன் பச்சை, மஞ்சள், ஊதா உள்ளிட்ட 5 வண்ணங்களில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65 கி.மீ. மைலேஜ், அலாய் வீல், 9 லி. கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளிட்ட அம்சங்களுடன் சந்தையில் ஹோண்டா SHINE 100 களமிறக்கப்பட்டுள்ளது.
News March 19, 2025
அந்த மாதிரி படம்.. மீண்டும் வந்தது எச்சரிக்கை

சிறார் ஆபாச வீடியோ இணையளத்தில் பதிவேற்றும் குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் அளித்த புள்ளி விவரங்களில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2023இல் 2,957 குற்றங்கள் என பதிவாகியிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் இது 6,079ஆக அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் வியாபார நோக்கில் ஆபாச படம் & வீடியோ பதிவிறக்கம் செய்வோர் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.