News August 14, 2024
தனியார் பள்ளிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பலவற்றுக்கு நாளை முதல் தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆக.16 வரலட்சுமி விரதம், ஆக.17, 18 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதனால், பல்வேறு தனியார் பள்ளிகள் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவித்துள்ளன. திங்கள் கிழமை வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
தாக்கத்தை ஏற்படுத்துமா OPS, செங்கோட்டையன் அரசியல்

அதிமுகவை ஒருங்கிணைத்தே தீருவோம் என்று தேவர் குருபூஜை அன்று டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சபதம் ஏற்றனர். ஆனால், சபதம் எடுத்து 25 நாள்களிலேயே புதிய கட்சியை தொடங்குவேன் என்று OPS கூறுகிறார். மறுபுறம் செங்கோட்டையனோ தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க தொடங்கினால், 2026-ல் தமிழக அரசியலில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கமெண்டில் சொல்லுங்க.
News November 25, 2025
600 முறை மரணத்தை ஏமாற்றிய லெஜண்ட் காஸ்ட்ரோ!

கியூப புரட்சியாளரும், முன்னாள் கியூப அதிபருமான பிடல் காஸ்ட்ரோ மறைந்த நாள் இன்று. அவரை கொல்ல அமெரிக்கா 600 முறை முயற்சித்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். ஆனால் அந்த 600 சதி திட்டங்களையும் தகர்த்தெறிந்து 90 வயது வரை வாழ்ந்தவர் பிடல் காஸ்ட்ரோ. 2016-ம் ஆண்டு நவ.25-ம் தேதி வயது மூப்பின் காரணமாகவே அவர் காலமானார். இன்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஐகான்களில் ஒருவராக திகழ்கிறார்.
News November 25, 2025
இதுதான் ராமர் கோயிலில் ஏற்றப்படும் கொடி!

அயோத்தி ராமர் கோயிலில் PM மோடி ஏற்றி வைக்கும் கொடியின் முதல்கட்ட படங்கள் வெளியாகி உள்ளன. செங்கோண முக்கோண வடிவில் 20 அடி நீளம், 10 அடி அகலத்தில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடியானது ராமரின் சக்தியையும், வீரத்தையும் குறிக்கும் வகையில், சூரியனின் உருவத்தை கொண்டுள்ளது. மேலும், ‘ஓம்’ மற்றும் கோவிதர் மரமும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.


