News March 9, 2025

4 விருதுகளைத் தட்டிச் சென்ற சேலம் கோட்டம்!

image

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) சார்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் எரிபொருள் சேமிப்பு, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்காக 4 விருதுகளை வென்று சிறப்பித்துள்ளது.

Similar News

News September 10, 2025

சேலம்: மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு முகாம்

image

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (செப்.10) மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் நடைபெற்றது .இக்கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தகவல் தெரிவித்தார்.

News September 10, 2025

சேலம்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

image

சேலம் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 10, 2025

சேலம்: ரூ 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை மாத சம்பளம்

image

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 35 வயதுகுட்பட்ட மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கான அரிய வாய்ப்பு இவர்களுக்கு ஜெர்மனியில் பணிபுரிய ரூ.2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை மாத சம்பளம் பெற வாய்ப்புள்ளது. அதற்காக ஜெர்மன் மொழி இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது தகுதிவாய்ந்தவர்கள இணையதளத்தில் www.tahdco.com விண்ணப்பித்து பயன்பெற சேலம் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!