News January 1, 2026
4-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.18 டிரில்லியன் US டாலர்களை எட்டியதன் மூலம், ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. மேலும், 2030-ம் ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்தி 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் நாடுகளில் தரவரிசையை தெரிந்துகொள்ள, மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் பண்ணுங்க.
Similar News
News February 6, 2026
பிப்ரவரி 6: வரலாற்றில் இன்று

*1931 – சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேரு நினைவு நாள்
*1945 – பாடகர் பாப் மார்லி பிறந்தநாள்
*1956 – கவிஞர் பிறைசூடன் பிறந்தநாள்
*1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் டைட்டன் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாக சோதனை
*1983 – வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பிறந்தநாள்
*2022 – பாடகி லதா மங்கேஷ்கர் நினைவு நாள்
News February 6, 2026
தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை உரியவரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு கடல் கடந்தும் பாராட்டுகள் குவிகின்றன. பத்மாவின் நேர்மையை அறிந்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். தனது உதவியாளரான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவிடம் பரிசை வழங்கியதோடு, வீடியோ காலில் உரையாடி மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
News February 6, 2026
அமைச்சர் மீது கடும் கோபத்தில் CM ஸ்டாலின்

நேற்று CM ஸ்டாலின் பங்கேற்ற கைவினை கலைஞர்களுக்கான விருதுகள் விழாவிற்கு அமைச்சர் காந்தி வரவில்லை. அதிர்ச்சியடைந்த CM ஸ்டாலின், அமைச்சரிடம் விளக்கம் கேட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தலைமைச் செயலகம் சென்ற அமைச்சர் காந்தியை CM ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாகவும், விளக்கம் சொல்ல முயன்றபோது வாயை மூடும்படி கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அமைச்சரின் முகம் வாடியதாம்.


