News January 17, 2026

4 மாசத்துக்கு மோடி இப்படி தான் பேசுவார்: கார்த்தி சிதம்பரம்

image

PM மோடி வரும் 23-ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார். இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள MP கார்த்தி சிதம்பரம், ‘PM மோடி தமிழகம் வந்தாலே தமிழ் கலாசாரம் பிடிக்கும், இட்லி-தோசை தான் சாப்பிடுவேன், பாரதியார் கவிதை கேட்டால்தான் தூக்கமே வரும் என பேசுவார்’ என்று விமர்சித்துள்ளார். தான் திருக்குறளை கேட்காத நாளே இல்லையென மோடி இன்னும் 4 மாதத்துக்கு சொல்லுவார் எனவும் அவர் கிண்டல் செய்துள்ளார்.

Similar News

News February 2, 2026

மத வன்முறையை தூண்டுவதே பாஜகவின் எண்ணம்: CM

image

எந்த வகையில் மத வன்முறையை தூண்டலாம் என்பதே பாஜகவின் நோக்கம் என CM ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜகவின் நோக்கத்துக்கு மௌன சாட்சியாக அதிமுக அமைதி காக்கிறதாகவும், தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவுக்கு அதிமுக சாமரம் வீசும் அடிமையாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மாநில சுயாட்சி என்றாலே அதிமுக பயந்து ஒளிந்துகொள்கிறது எனவும் தொண்டர்களுக்கு CM ஸ்டாலின் எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.

News February 2, 2026

தலாய் லாமாவுக்கு கிடைத்த முதல் கிராமி விருது

image

திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தனது 90-வது வயதில் மதிப்புமிக்க கிராமி விருதை வென்றுள்ளார். சிறந்த Audio Book பிரிவில் ‘‘Meditations: The Reflections of His Holiness the Dalai Lama’’ என்ற ஆல்பத்திற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை தலாய் லாமா நேரில் வந்து வாங்கமுடியாததால், அவரது சார்பில் பிரபல இசைக்கலைஞர் ரூஃபஸ் வைன்ரைட் இதனை பெற்றுக்கொண்டார்.

News February 2, 2026

‘மாம்பழம்’ யாருக்கு? 3 வாரங்களில் பதிலளிக்க ஆணை

image

பாமக தலைமை அலுவலக முகவரி மாற்றம், மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கியது தொடர்பாக 3 வாரத்திற்குள் ECI பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அன்புமணிக்கு சின்னம் ஒதுக்கியதை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த பரபரப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அன்புமணி தரப்புக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!