News March 29, 2024
4 புதிய ரயில் பெட்டிகள்

நீலகிரியில் வரும் சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்று (மார்ச்.29) முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதற்காக நேற்று 4 புதிய ரயில் பெட்டிகள் குன்னூர் கொண்டு வரப்பட்டன. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் 4 பெட்டிகள் ஊட்டி- கேத்தி இடையே இயக்கப்படும் என கூறினார்.
Similar News
News April 21, 2025
நீலகிரி: ரேஷன் கடையின் கதவை உடைத்த யானை

நீலகிரி, தேவர் சோலை காவல் நிலையம் பின்புறம் உள்ள தேயிலைத் தோட்ட கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த காட்டு யானை, கடையின் ஷட்டரை இடித்து தள்ளி, ரேஷன் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. இந்தக் கடையினை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் யானையிடமிருந்து பாதுகாக்க, கம்பிகளால் ஆன வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News April 20, 2025
நீலகிரியில் குறைகளைக் களையும் குமரன்!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் அமைந்துள்ளது அன்னமலை முருகன் கோயில். குறிஞ்சி நிலத்தில் எழுந்தருளியுள்ள தமிழ் கடவுளான முருகப் பெருமான், கையில் தண்டம் ஏந்தி தண்டாயுதபாணியாக இத்திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார். உதகையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. பக்தர்களின் பிரார்த்தனை, குறைகளை களையும் வகையில் இத்தலத்தில் தண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். SHARE செய்யவும்.
News April 20, 2025
அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 67 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <