News November 4, 2024

 4 நாட்கள் விதி மீறிய ஆம்னி பஸ்களுக்கு ரூ.7,18,000 அபராதம்

image

தீபாவளி பண்டிகையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேலூர் வட்டார போக்குவரத்து கமிஷனர் பட்டாபசாமி மேற்பார்வையில் பள்ளிகொண்டா, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. இதில் 959 ஆம்னி பஸ்கள் சோதனை செய்து. அவற்றில் விதி மீறிய 101 பஸ்களுக்கு ரூ.7 லட்சத்து 18 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News August 24, 2025

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணியில் தீவிரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 23.08.2025 இரவு ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில், வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த பணி நடக்கிறது.

News August 23, 2025

வேலூர்: இனி வீட்டில் இருந்தே வரி செலுத்தலாம்

image

வேலூர் மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த <>இணையதளம் மூலம்<<>> நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News August 23, 2025

வேலூரில் ஆட்டோக்கு அதிக காசு கேட்டா இத பண்ணுங்க

image

ஆட்டோக்கள் மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளது. விதிமுறையின்படி ஆட்டோக்கள் முதல் 2 கி.மீ க்கு ரூ.30ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் நி.மி க்கு ரூ.1.50 வசூலிக்கலாம். இரவு(11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உங்க பகுதி <>RTO<<>> அலுவகத்தில் புகார் செய்யலாம். அவசியமான தகவல் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!