News March 28, 2024
4 வெவ்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் பலி

சேத்துப்பட்டு – ஆரணி நெடுஞ்சாலையில் நேற்று மட்டும் 4 வெவ்வேறு இடங்களில் காலை விபத்துகளில் 5 பேர் பலி. செஞ்சி பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார், மேல் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரர் , வெங்கடேசன், மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த துளசி, இடையகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Similar News
News December 13, 2025
தி.மலையில் இன்று ரேஷன் குறை தீர்வு முகாம்

தி.மலை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் இன்று (டிசம்பர்-13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும். இந்த முகாமில் புதிய குடும்ப அட்டை புதுப்பித்தல் பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம் முகவரி மாற்றம் நகல் அட்டை சேவை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 13, 2025
தி.மலை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<
News December 13, 2025
தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தி.மலை மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT


