News April 5, 2025
4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

முகப்பேர் பகுதியில், 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என உறுதியளித்தனர்.
Similar News
News April 9, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” 08.04.2025 இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பொறுப்பான அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
News April 8, 2025
சிக்ஸ் பேக்ஸ் மோகம்- பலியான பாடி பில்டர்

காசிமேட்டில் உடலை விரைவாக கட்டுமஸ்தாக மாற்ற நினைத்த ராம்கி(35), தனது பயிற்சியாளர் தினேஷ் பரிந்துரைத்த ஸ்டீராய்டை எடுத்துக்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் பரிந்துரை இல்லமால் ஸ்டீராய்டு எடுத்து கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. தற்போது, சமூக வலைத்தளங்களை பார்த்து வரும் மோகத்தால் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 8, 2025
ரேஷன் அட்டையில் திருத்தும் செய்யணுமா?

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, சென்னை மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க