News August 14, 2024
4 உலக சாதனை படித்த திருச்சி சிறுமி

திருச்சி தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஸ்ருதிஹா. இவர் 2022ஆம் ஆண்டு தடகளப் பயிற்சியில் துவங்கி 2024ஆம் ஆண்டு கூட்டு மல்லர் கம்பு மற்றும் யோகாவில் கின்னஸ் உலக சாதனை குழு பட்டியலில் இடம் பிடித்தார். மேலும் ஜூனியர் உலக சாதனை புத்தகம், அட்லீ உலக சாதனை புத்தகம், இன்ஜினியஸ் உலக சாதனை புத்தகம், 2024 குழு மலர் கம்பத்திலும் என மொத்தம் நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார்.
Similar News
News August 31, 2025
திருச்சி: நீங்களே இனி ஆதார் கார்டில் திருத்தம் செய்யலாம்!

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் <
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News August 31, 2025
திருச்சியில் இன்று வேலைவாய்ப்பு முகாம்!

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆக.31) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 10,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன. குறைந்தது 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 9499055901. SHARE !
News August 31, 2025
திருச்சி: மின்சார குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாநகரப் பகுதிகளில் செப்டம்பர் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் வரும் செப்.12-ம் தேதியும், திருச்சி நகரிய கோட்டத்தில் செப்.16-ம் தேதியும், திருச்சி கிழக்கு கோட்டத்தில் செப்.19-ம் தேதியும் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மின் மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.