News November 28, 2024

4 ஆவது நாளாக பட்டாசு உற்பத்தி பாதிப்பு

image

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நான்கு நாட்களாக சாரல் மழை மற்றும் குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவுவதால் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்ச்சியான சூழலில் பட்டாசு உற்பத்தி பணிகள் மேற்கொள்ள முடியாது என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து பட்டாசு ஆலைகளும் தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Similar News

News August 6, 2025

விருதுநகர்: அரசு துறையில் வேலை

image

விருதுநகர் மக்களே.. தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் Office Assistant பதவிக்கு காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு 23.07.25 முதல் 14.08.25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 15,700 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும். Share It.

News August 5, 2025

இறுதி கட்டத்தை எட்டியுள்ள மேம்பால பணிகள்

image

சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் துவங்கி ஓராண்டாகியுள்ள நிலையில் தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.62 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இப்பணி விறுவிறுப்பாக நடைபெற துவங்கி தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

News August 5, 2025

தொடர் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

image

சிவகாசி, வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழை காரணமாக பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவது உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிற்பகல் வரை வெயில் அடித்தாலும் பிற்பகலை தொடர்ந்து மழை பெய்து வருவதால் உற்பத்தி பாதித்துள்ளது.

error: Content is protected !!