News September 9, 2025
தமிழ்நாட்டில் இருந்து 3-வது துணை ஜனாதிபதி

நாட்டிற்கு அதிக துணை ஜனாதிபதிகளை வழங்கிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இன்றைய துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ற நிலையில், இதுவரை 3 துணை ஜனாதிபதிகளை தமிழகம் வழங்கியுள்ளது. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன், 1952 முதல் 1962 வரை 10 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அடுத்ததாக, ராமசாமி வெங்கட்ராமன் 1984 முதல் 1987 வரை அப்பதவி வகித்தார்.
Similar News
News March 3, 2026
விவசாயிகளுக்கு இந்த அடையாள எண் அவசியம்!

ஆதார் கார்டு போல, அனைத்து விவசாயிகளும் ‘விவசாய அடையாள அட்டை’ வைத்திருக்க வேண்டும் என தமிழக விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், அரசின் மானியங்கள், பயிர்க் காப்பீடு & நேரடி நிதி உதவிகளை (DBT) ஊழலின்றி, நேரடியாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆதார் எண்ணை கொடுத்து, இந்த அடையாள எண்ணை பெற, <
News March 3, 2026
20 நாள்களில் கூடுதலாக ₹6,000 வழங்கிய தமிழக அரசு

நிதித் திட்டங்களில் பயன்பெறுவோருக்கு 20 நாள்களுக்குள் கூடுதலாக ₹6,000 வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வழக்கம்போல் ₹1,000 உரிமைத் தொகையை எதிர்பார்த்த மகளிருக்கு பிப்.13 அன்று கூடுதலாக ₹4,000 சேர்த்து ₹5,000 வழங்கப்பட்டது. அதேபோல், இன்றைய தினம் மாற்றுத் திறனாளிகள், முதியோர், கைம்பெண் உதவித் தொகை பெறுவோருக்கு மேலும் ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
இந்தியாவில் X ஆபாச வீடியோ பார்க்க முடியாது

X தளத்தில் ஆபாச பதிவுகளை பதிவிட கட்டுப்பாடுகளை விதிக்க, சமீபத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இந்தியாவில் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இனி X தளத்தில் இடம்பெறாது என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றில் இருந்தே ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் தடை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், வெளிநாடுகளுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


