News March 20, 2024
சென்னையில் 3வது ரயில் முனையம்

சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முழுவதும் அகற்றப்படும். ரயில்வே துறையில் கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும். விமானக் கட்டணம் முறைப்படுத்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
பிரதமர் வெளிநாட்டு பயணம்.. ₹462 கோடி செலவு

கடந்த 5 ஆண்டுகளில் PM மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ₹462.58 கோடி செலவிடப்பட்டதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, யுஏஇ, யுகே, ஆப்ரிக்கா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட 43 நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் மட்டும் பிரதமர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றபோது ₹25.5 கோடி செலவிடப்பட்டது. இதுதான் பிரதமர் வெளிநாட்டுப் பயணங்களிலேயே அதிக செலவான தொகை.
News February 13, 2026
பிப்ரவரி 12: வரலாற்றில் இன்று

1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
2019 – புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட நாள்
1483 – முகலாயப் பேரரசர் பாபர் பிறந்த தினம்
1952 – சுஷ்மா சுவராஜ் பிறந்த தினம்
News February 13, 2026
பாமகவில் இருந்து உருவான கட்சிகளின் லிஸ்ட்

ராமதாஸ் தரப்பு ‘அய்யா பாமக’ என்ற கட்சியை தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. பாமகவில் இருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்குவது இது முதல்முறை அல்ல. மக்கள் நல உரிமைக் கழகம் (பண்டிருட்டி ராமசந்திரன்), தமிழ் பாமக (தீரன்), தமமுக (ஜான் பாண்டியன்), தமிழர் அரசு ( பசுபதி பாண்டியன்), தமிழக வாழ்வுரிமை (வேல்முருகன்), மக்கள் விடுதலை கழகம் (முருகவேல்ராஜன்) உள்ளிட்ட பல கட்சிகள் உருவெடுத்து இருக்கிறது.


