News June 20, 2024
3ஆவது இடத்தில் இந்தியாவின் விமான போக்குவரத்து

உள்நாட்டு விமான போக்குவரத்தில், உலகின் 3ஆவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் 5ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது இந்தோனேசியா மற்றும் பிரேசில் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி, 1.56 கோடி விமான இருக்கை வசதியுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உள்நாட்டு விமானங்களின் இருக்கை வசதி ஆண்டுக்கு 6.9% வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கா, சீனா முதல் 2 இடங்களில் உள்ளன.
Similar News
News September 12, 2025
காலையில் இந்த மூலிகை தேநீர் குடிங்க.. அவ்வளோ நல்லது.

ஃபோலிக் ஆசிட் உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு ஓமம் தேநீர் மிகவும் நல்லது என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் செரிமானம் மேம்படவும் இது உதவுமாம்.
*கொதிக்கும் நீரில் கிரீன் டீயை கலந்து நன்கு கொதிக்க வைக்கவும்.
*அதில், ஓமத்தை சேர்த்து தண்ணீர் பாதியாக சுண்டும் வரை நன்றாகக் கொதிக்க விடுங்கள்.
*கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி தேன் சேர்த்தால், சத்தான ஓமம் தேநீர் ரெடி. SHARE IT.
News September 12, 2025
நடிகர் விஜய் ஆண்டனி 4 நாள்கள் கோமாவில் இருந்தார்

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி 4 நாள்கள் கோமாவில் இருந்ததாக அவரது நண்பரும் இயக்குநருமான ஆண்ட்ரூ லூயிஸ் தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனியின் 25-வது படமான ‘சக்தித் திருமகன்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கல்லூரி காலத்தில் ஏற்பட்ட அந்த விபத்துக்கு பிறகு கடின உழைப்பால் இந்த நிலையை அவர் அடைந்துள்ளதாக உணர்ச்சி பொங்க தெரிவித்தார். கடின முயற்சிக்கு இதுவும் ஒரு உதாரணம்.
News September 12, 2025
இந்தியா Vs பாக். டிக்கெட் விற்பனை மந்தம்

ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்னும் விற்றுத் தீராமல் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் டிக்கெட்டுகள் 4 நிமிடங்களுக்குள் காலியாகின. ஆனால் இம்முறை லோயர் ஸ்டாண்ட் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். ஜாம்பவான்கள் கோலி, ரோகித் இல்லாதது இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.