News May 7, 2024
3ஆம் கட்டத் தேர்தல் நிறைவு

மக்களவைக்கு நடைபெற்ற 3ஆம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மக்களவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், 3ஆவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி, காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்தனர். ஏற்கெனவே அறிவித்தபடி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
Similar News
News September 24, 2025
திருவள்ளூர்: 12 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப். 23) நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற 12 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரதாப் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராஜன் , வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
News September 24, 2025
ராசி பலன்கள் (24.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News September 24, 2025
அதிமுக ஆபிஸின் அதிகாரம் டெல்லியில் உள்ளது: கனிமொழி

அமித்ஷா வீட்டில் தான் அதிமுகவின் ஆபீஸ் உள்ளது என்று கனிமொழி கூறியதற்கு, திமுகவின் அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்ததே ஜெயலலிதா தான் என்று EPS பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், அதிமுக ஆபிஸ் பில்டிங் மட்டுமே இங்கு உள்ளது, ஆபிஸின் அதிகாரம் டெல்லியில் உள்ளது என்று கனிமொழி விமர்சித்துள்ளார். என்னதான் கர்சீப்பை வைத்து மறைத்தாலும், அது நீங்கள் (EPS) தான் என்று பட்டவர்த்தனமாக தெரிவதாகவும் சாடினார்.