News August 7, 2024
3rd ODI: இலங்கை பேட்டிங்

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான, 3ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற SL அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டி டை ஆன நிலையில், 2ஆவது போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் SL அணி முன்னிலையில் உள்ளது. கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் IND அணியும், தொடரை கைப்பற்றும் நோக்கில் SL அணியும் இருப்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 4, 2026
டேஞ்சரில் சச்சினின் ரெக்கார்டு!

ஆஸி.,க்கு எதிரான 5-வது டெஸ்டில் ஜோ ரூட் 65 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் 67-வது அரைசதமாகும். இதன் மூலம், அவர் சச்சினின் மெகா ரெக்கார்டை நெருங்கியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை சச்சின்(68) தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முந்திவிடுவாரா ஜோ ரூட்?
News January 4, 2026
வெனிசுலா புதிய அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்!

<<18758081>>அதிபர் மதுரோ<<>> சிறைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, முறையான ஆட்சிமாற்றம் வரும்வரை வெனிசுலாவை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும் என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை, இடைக்கால அதிபராக நியமித்து, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்(SC) உத்தரவிட்டுள்ளது. நாட்டின் நிர்வாகத்தை தொடரவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக SC தெரிவித்துள்ளது.
News January 4, 2026
தங்கம் விலை சவரன் ₹1,00,800

தங்கம் விலை இன்று (ஜன.4) மாற்றமின்றி காணப்படுகிறது. நேற்று காலை 22 கேரட் கிராமுக்கு ₹60 குறைந்த நிலையில், மாலையில் ₹80 அதிகரித்தது. இதனால் கிராம் ₹12,600-க்கும், சவரன் ₹1,00,800-க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் உயர்ந்ததால் இன்று குறையும் என எதிர்பார்த்த நிலையில், விலையில் மாற்றம் இல்லாததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


