News August 3, 2024

ராணுவத்திற்கு 3ஆம் வகுப்பு மாணவன் உருக்கமான கடிதம்

image

வயநாட்டில் ராணுவ வீரர்களின் மீட்பு பணிகளால் ஈர்க்கப்பட்ட 3ஆம் வகுப்பு மாணவன் ரேயன், அவர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அன்புள்ள இந்திய ராணுவமே, எனது அன்புக்குரிய வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதை கண்டு பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். Big சல்யூட்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 14, 2025

BREAKING: பிஹாரில் 125+ இடங்களில் NDA வெற்றி

image

பிஹார் தேர்தலில் NDA கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 147 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான 122 இடங்களுக்கு மேல் NDA கூட்டணி கைப்பற்றியுள்ளது. MGB கூட்டணி 17 இடங்களிலும், ஒவைசியின் AIMIM 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவில் NDA கூட்டணி 200+ இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது.

News November 14, 2025

தேஜஸ்வி யாதவ் வெற்றி

image

பிஹார் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் சில சுற்றுகளில் பாஜக வேட்பாளர் சதீஷ்குமாரை விட பின்தங்கி இருந்தார். எனினும், அடுத்தடுத்த சுற்றுகள் முடிவில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி வென்றுள்ளார். அதேநேரம் அவரது MGB கூட்டணி 35 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.

News November 14, 2025

மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி: அமித்ஷா

image

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது கட்டாயம் என்பதை பிஹார் மக்கள் நிரூபித்துள்ளனர் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் கிடைத்த ஒவ்வொரு வாக்கும் மோடி அரசின் மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் ஊடுருவல்காரர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!