News June 1, 2024
ராக்கெட்டின் செலவுகளை குறைக்கும் 3டி தொழில்நுட்பம்

விண்வெளித் துறையில் 3டி அச்சுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், ராக்கெட் என்ஜினைத் தயாரிக்கும் செலவும், காலமும் பன்மடங்கு குறைவதாக குறிப்பிடும் விஞ்ஞானிகள், இம்முறையில் என்ஜினைத் தயாரிக்க 3 மாதங்களுக்கு பதிலாக, 72 மணி நேரமே தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர். வழக்கமான என்ஜினுடன் ஒப்பிடும் போது, 3டி என்ஜினை தயாரிக்க 10இல் ஒரு மடங்கு தொகையே செலவாவதாகவும் கூறுகின்றனர்.
Similar News
News September 19, 2025
மீண்டும் உயர தொடங்கிய அதானி குழும பங்குகள்

வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி, செயற்கையான முறையில் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்வதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் அது தவறான குற்றச்சாட்டு என செபி நேற்று விரிவான அறிக்கையை வெளியிட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் இன்று லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. அதானி குழுமத்தின் பங்குகள் 10% வரை உயர்வுடன் வா்த்தகத்தை தொடங்கியுள்ளன.
News September 19, 2025
ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர்கள் யார் யார்?

2007-ம் ஆண்டு இதேநாளில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டு யுவராஜ் சிங் கிரிக்கெட் ரசிகர்களை மிரள வைத்தார். ஆனால் யுவராஜ் சிங்கை தவிர்த்து சர்வதேச கிரிக்கெட் மற்றும் IPL-ல் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்தது யார் யார் என்று தெரியுமா? அந்த பட்டியலை மேலே புகைப்படங்களாக கொடுத்துள்ளோம். ஒவ்வொன்றாக Swipe செய்து பாருங்கள்.
News September 19, 2025
வெறும் 40 பைசாவில் ₹10 லட்சம் இன்சூரன்ஸ்!

ரயிலில் பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால் மருத்துவம் பார்க்க, ₹10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போதே இந்த இன்சூரன்சுக்கான ஆப்ஷனை க்ளிக் செய்து, 40 பைசாவை கட்டினால் போதும். ரயில் விபத்தில் ஒருவர் இறந்தாலோ, உடல் முழுவதுமாக செயலிழந்தாலோ ₹10 லட்சம் வரை கிடைக்கும். பகுதியளவு செயலிழந்தால் ₹7.5 லட்சமும், காயம் ஏற்பட்டால் ₹2 லட்சமும் வழங்கப்படுகிறது. SHARE.